hraja
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மக்கள் நலக்கூட்டணி குறித்து கமெண்ட் அடித்தார்.
அவர், ‘’மக்கள் நலக்கூட்டணி என்பது மக்கள் விரோத கூட்டணி. தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் உள்ளன. ஆனால் 30 நாட்களுக்கு மேல் அந்த கூட்டணி நீடிக்காது. வைகோ அந்த கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் உடைவது உறுதி. ஏனென்றால் அவர் நிலையற்ற தன்மை கொண்ட தலைவர். நிச்சயமாக தேர்தலின் போது அந்த கூட்டணி இருக்காது.
கம்யூனிஸ்டு என்றால் நாட்டுக்கு எதிரான தீய சக்தி, வன்முறையில் ஈடுபடும் கட்சி என்றுதான் அர்த்தம். கம்யூனிஸ்டுகள் அதிகமாக உள்ள மாநிலங்களில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. எக்காரணத்தை கொண்டும் அந்த கட்சியோடு பாஜக ஒரு காலத்திலும் கூட்டணி அமைக்காது’’என்று கூறினார்.