கமல், நிகில் முருகன், ரஜினி
கமல், நிகில் முருகன், ரஜினி

 

சென்னை: பிரபல நடிகர்கள் கமல்ஹாசன்,ரஜினிகாந்த் உட்பட பலருக்கு பி.ஆர்.ஓ.வாக (மக்கள் தொடர்பாளர்)  இருக்கும் நிகில் முருகன் மீது செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஐ.சி.எஃப்.. நிறுவனத்தில் பணி புரிந்தவர் முருகன் என்கிற நிகில் முருகன். ஜர்னலிசம் படித்த இவர், திரைப்பட மக்கள் தொடர்பாளராக வேண்டும் என்று விரும்பினார். அதன்படி, “உல்லாசம்’ திரைப் படம் மூலம் மக்கள் தொடர்பாளரானார்.

இவரது நட்பான அணுகுமுறை, சிறப்பான திட்டமிடல் காரணமாக பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுக்கு பி.ஆர்.ஓ. மற்றும் மேனேஜராக ஆனார். மேலும் பல படங்களுக்கும் பி.ஆர்.ஓ. ஆக செயல்பட்டார்.

ஒரு கட்டத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கும் பி.ஆர்.ஓ.வாக செயல்பட ஆரம்பித்தார்.

“சிறந்த பி.ஆர்.ஓ.” என்று இவருக்கு சில அமைப்புகள் விருதுகளும வழங்கி உள்ளன. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிவரும் ‘அம்மணி’ படத்தில் நடிகராகவும் இவர் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், “நிகில் முருகன் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்வதாக ஊடகத்தில் பணி புரியும் பெண் ஒருவர் ப, பி.ஆர்.ஓ. சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து நேற்று  பி.ஆர்.ஓ. சங்கங்க உறுப்பினர் கூடி, நிகில் முருகனின் தரப்பை அறிய அவருக்கு அழைப்பு விடுத்தனர்.   ஆனால்  அவர்,  தனக்கு உடல் நலமில்லை என்று சொல்லி பிரபல மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார். தனது உதவியாளரிடம் கடிதம் கொடுத்து அனுப்பினார்.

ஆனால் இதை சங்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தின மணி  நாளிதழின் மூத்த முதன்மை ஆசிரியரான சொக்கலிங்கம் குடும்பத்தில் பிறந்து டிப்ளமா ஜர்னலிசம் படித்து பல சினிமா இதழ்களில் பணி புரிந்தவர் நிகில் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, “நிகில் முருகன், லாங் டிரைவ் செல்லலாம் என்று பெண்களிடம் டார்ச்சர் செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்கு முன்பும் இதே போன்ற புகார்கள் இவர் மீது வந்தன. ஆனால் கமல் உட்பட பெரும் நடிகர்களுக்கு பி.ஆர்.ஓ. ஆக இவர் இருப்பதால் என்ன நடவடிக்கை எடுப்பது என்று பி.ஆர்.ஓ. சங்கத்தில் விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் கமல் காதுக்கு விசயம் செல்லவே, எனக்கும் அவருக்கும் தொழில் ரீதியான பழக்கம்தான். நிகில் முருகன் மீது தவறு இருந்தால், அதற்கான நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார். இதையடுத்தே நேற்று நிகில் முருகனை அழைத்து விசாரிக்க பி.ஆர்.ஓ. யூனியன் முடிவெடுத்தது. ஆனால் அவர் வரவில்லை” என்று கூறப்படுகிறது.

மவுனம் ரவி
மவுனம் ரவி

இந்த சம்பவம் குறித்து பி.ஆர்.ஓ. சங்க பொருளாளர் மவுனம் ரவியிடம் கேட்டோம்.  அவர், “குறிப்பிட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரிக்க நிகில் முருகனுக்கு அழைப்பு விடுத்தோம். அவர் வரவில்லை. அதே நேரம், தான் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று கடிதம் அனுப்பி இருக்கிறார்”என்றார்.

நிகில் முருகன் தரப்பை அறிய அவரை தொடர்புகொண்டோம். போனை எடுக்க வில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தோம். போன் எடுக்கப்படவில்லை.  “உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போாரடலாம்..” என்ற திரைப்பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

பிரபல நடிகர்களின் பிரபல பி.ஆர்.ஓ.ஆன நிகில் முருகன் மீதான செக்ஸ் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.