கமல் – இளையராஜா இணையும் "முத்துராமலிங்கம்"

Must read

images
கார்த்திக்கும் அவர் மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் “முத்துராமலிங்கம்” படத்தில் இன்னொரு ஸ்பெஷல்…  இளையாராஜா இசைமைக்கும் இந்தப்படத்தில்  ஒரு பாடலை பாடுகிறார் கமல்ஹாசன். ““தெற்கு தேச சிங்கமடா, முத்துராம லிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா”  என்று துவங்குகிறது அந்த பாடல்.
மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமும் உண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் பாடல் எழுதுகிறார்.  மறைந்த நடிகர் முத்துராமனுக்கு பாடல் எழுதி, அவர் மகன் கார்த்திக், அவரது மகன் கௌதம் என்று மூன்று தலைமுறைக்கு பாடல் எழுதியிருக்கிறார் பஞ்சு அருணாசலம்.
இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்க இருக்கிறார்.
 

More articles

Latest article