"சத்யா" படத்தில்..
“சத்யா” படத்தில்..

தூங்காவனம் படத்தை அடுத்து கமல் நடிக்க உள்ள புதியபடத்தை மலையாள இயக்குநர் டி,கே,சஞ்சீவ்குமார் டைரக்ட் செய்கிறார்.

அந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடிக்கப்போகிறாராம். 1986 ஆம் ஆண்டு டி,ராஜேந்தரின் மைதிலிஎன்னைக்காதலி படத்தின் மூலம் அறிமுகமான அமலா, அடுத்தடுத்து கமல், ரஜினி உட்பட எல்லா முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாக விளங்கினார். தமிழோடு, தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்தார். 92ம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை காதல் திருமணம் செய்துகொண்டு திரையுலகைவிட்டு ஒதுங்கினார்.

நீண்ட நாள் கழித்து நடிப்புக்குத் திரும்பியவர் கடந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சித்தொடர் ஒன்றில் நடித்தார். இப்போது அவருடைய மகன் அகில் கதாநாயகனாக நடிக்கத் துவங்கிவிட்டார்.

இந்த நிலையில் பெரிய திரைக்கு வருகிறார் அமலா. அதுவும் கமலின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக!

ஏற்கெனவே கமலுடன் பேசும்படம், சத்யா, வெற்றிவிழா ஆகிய படங்களில் நடித்திருக்கும் இவர், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் ஜோடி சேருகிறார்.