“கபாலி படங்களை பரப்பாதீங்க…” : இயக்குநர் ரஞ்சித் வேண்டுகோள்

Must read

 

k

பாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள் வெளியாதில் இருந்து கபாலி தொடர்பான செய்திகளும்தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. வில்லன்களிடம் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசுவது, ஓட்டலில் சாப்பிடுவது, காரில் வந்து இறங்குவது, மலேசிய போலீசார் மத்தியில் கைதியாக அவர் நிற்போது போன்ற நிறைய காட்சிகள் இணையத்தில் பரவிவிட்டன.

இவற்றை செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பரவ விடுகிறார்கள் ரசிகர்கள்.

“கபாலி’ படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் கதை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று படக்குழுவினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இந்த நிலை.

ரஞ்சித்
ரஞ்சித்

ஆகவே இப்போது படப்பிடிப்பு தளங்களில் கெடுபிடி தூள் பறக்கிறது. ரஜினியின் வீடு, பெரிய தொழிற்சாலை, வில்லன்கள் வாழும் பிரம்மாண்ட கட்டிடங்கள் என மலேசியாவில் பல்வேறு செட்டிங் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த அரங்கங்களுக்குள் வருபவர்களுக்கு புகைப்படததுடன் கூடிய அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளன. ரசிகர்களே வெளியாட்களோ படப்பிடிப்பு அரங்கத்துக்குள் நுழையாமல் இருக்க தளத்தின் சுற்றிலும் கடும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது

அது மட்டுமல்ல… துணை நடிகர்கள் சிலரும் ஆர்வக்கோளாறில், ரஜினியை செல்போன்களில் படம் எடுத்து இணைய தளங்களில் பரப்புவதாக தெரியவந்திருக்கிறது. ஆகவே இப்போது படக்குழுவினர் கூட, செல்போன்களை படப்பிடிப்பு அரங்குக்குள் கொண்டு செல்ல தடை போட்டுவிட்டார்கள்.

அதோடு, கபாலி பட இயக்குநர் ரஞ்சித், “தயவு செய்து கபாலி படப்பிடிப்பில் எடுத்த படங்களை இணையத்தில் பரப்பாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More articles

Latest article