கன்னி

Must read

கன்னி ராசி
கன்னி ராசி

கடமை உணர்வு மிக்க கன்னிராசி நேயர்களே…
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்து திண்டாட வைத்த ராகுபகவான் இப்போது உங்கள் ஜென்ம ராசியை விட்டு விலகி 12-ம் விட்டிற்குள் இடம்பெயர்கிறார். ஆகவே இதுவரை தடைபட்டிருந்த காரியம் யாவற்றையும் சுறுசுறுப்பாக, உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த சோர்வு அகலும். முகம் பொலிவுறும். மனதில் நிலவிய வீண் குழப்பங்கள், பயம் அகலும். உடல் ஆரோக்யம் பெறும்.
குடும்பத்தினர் உங்களைப் புரிந்து நடந்துகொள்வார்கள். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். இழுத்தடித்துக்கொண்டிருந்த வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். ஆனாலும், விரயஸ்தானமான 12ல் ராகு மறைவதால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநில அல்லது வெளிநாட்டு பயணம் அமையும். பண விரயம் ஏற்படும். சேமிப்பு கரையும். ஒரு சிலர் புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று வருவார்கள். . உற்றார் உறவிர் குடும்ப சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அதனாலும் பணச் செலவு ஏற்படும்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை பழைய கடன்களை முடிவுக்குக் கொண்டுவருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச்செலவுகள் ஏற்படும். . அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.
11.03.2016 முதல் 15.11.2016 வரை ராகுபகவான் உங்கள் தனபாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் சூழ்நிலையைக்கு ஏற்பட நடந்துகொண்டு காரியங்களை சாதிப்பீர்கள். . எதிர்பாராத இனங்களில் பணம் வந்து சேரும்.
வழிபாடு: மதுரை மாவட்டம் மேட்டூநீரேத்தான் ஸ்ரீ துர்க்கை அம்மனை வணங்குங்கள்.
 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் அமர்ந்துகொண்டு கணவன் மனைவிக்குள் பிரச்சி்னைகளை ஏற்படுத்திய கேதுபகவான் இப்போது ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்கிறார். இதனால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இதுவரை எதிர்த்தவர்கள் நட்பாவார்கள். ஞானிகளின் தொடர்பால் மனம் தெளிவடையும். பிரிந்திருந்த தம்பதி ன்று சேருவார்கள். மனைவிக்கு இருந்துவந்த உடல் நலக் குறைவு சிறு சிகிச்சையால் சரியாகும்.
08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் உங்களின் நீண்டகால கனவு ஒன்று நிறைவேறும். . மனைவிவழியில் ஆதாயம் பெருவீர்கள். . பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனத்தாங்கல் ஏற்படும். சிலருக்கு சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு சிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
பொதுவாக, இந்த ராகு கேதுப் பெயர்ச்சி உங்களை விவேகமாக சிந்திக்கவைத்து வெற்றிகளை பெற்றுத்தரும்.
(துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள் அடுத்த பகுதியில்)

Previous articleசிம்மம்
Next articleதுலாம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article