கண்ணனுக்கு பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி?

Must read

 

 

ladu

கிருஷ்ண ஜெயந்தியான இன்று, பகவான் கண்ணனுக்கு படைத்த பல பலகாரங்களை வைத்து படைப்போம். கண்ணனுக்கு மிகப்பிடித்த அவல் லட்டு செய்து எப்படி என்று பார்ப்போமா?

தேவையானப் பொருட்கள்:

அவல் – 1 கப்

பொட்டுக் கடலை (உடைத்தது) – 1/2 கப்

முந்திரி – 6

திராட்சை – 6

ஏலப்பொடி – தேவையான அளவு

பால் – அரை கப்

சர்க்கரை – 1 கப்

நெய் – தேவையான அளவு

தேங்காய் துருவல் – 2 கப்

செய்முறை:

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும்.  வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும்.  சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளவும்.

குட்டிக்கண்ணனுக்குப்  பிடித்தமான அவல் லட்டுக்கள் தயார்!

More articles

6 COMMENTS

Latest article