கணிசமான ஓட்டுக்களை பெற்றார் தர்ஷிகா

கணிசமான ஓட்டுக்களை பெற்றார் தர்ஷிகா!

ஜெனிவா:

நேற்று நடந்த சுவிட்சர்லாந்து நாட்டு பாராளுமன்றத் தேர்தலில், ஈழத்தமிழ்ப்பெண் தர்ஷிகா கிருஷ்ணநாதன் பெருவாரியான வாழ்ககுளைப் பெற்றிருக்கிறார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது.
இத்தேர்தலில் பெர்ன் மாகாணத்தில் எஸ்.பி. கட்சி சார்பாக ஈழத்தமிழ் பெண்ணான தர்ஷிகா போட்டியிட்டார்.

தற்போது கிடைத்த தகவல்படி இதுவரை, யாரும் எதிர்பாராத அளவுக்கு 23 927 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஈழத் தமிழ் வேட்பாளர் ஒருவர் இந்த அளவுக்கு வாக்குகளைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். மூத்த அரசியல்வாதிகள் பலரை பின்தள்ளி, இவ்வளவு வாக்குகளை தர்ஷிகா பெற்றுள்ளார். எஸ்.பி. கட்சியில் 25 பேர் கொண்ட அணியில் 15 வது இடத்தை இவர் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர்களிடம் பேசிய தர்ஷிகா, “சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு என்னாலான அத்தனை பணிகளையும் செய்வேன்” என்றார்.