2
 
யார் யாருடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கூட்டணி கட்சிக்கு போகும் என்பது அந்தந்த கட்சித் தலைமைக்கே இதுவரை தெரியாது.
ஆனால் 234 தொகுதிகளுக்கும் பணத்தை கட்டவைத்து நேர்க்காணல் நடத்துகின்றனர். உதாரணத்திற்கு ஒரு கட்சியில் கன்னியாகுமரி தொகுதியில் 40 பேர் பணம் கட்டியிருப்பார்கள்..

அவர்கள் பணம் கட்ட ஆதரவாளர்களுடன் வந்தபோது ஆன செலவு, மீண்டும் நேர்க்காணலுக்காக வரும்போது ஆகும் செலவு பல லட்சங்களை சர்வசாதாரணமாக தாண்டும்..அதே குமரி தொகுதி கூட்டணி கட்சிக்கு போனால் எல்லாமே வேஸ்ட்டு..
இதுபோல பல கட்சிகளில் நடப்பவற்றை கூட்டினால் சீட்டு கேட்டு அலைபவர்களுக்கு பல கோடிகள் பணால் ஆகும்..அவர்கள் உழைத்தா சம்பாதித்தார்கள் என்ற கேள்வியை தவிர்க்கவும்
இறுதிக்கட்டமாக தொகுதிகள் முடிவாகாத நிலையில் இப்படி செய்வது தர்மமா என்று கேட்டால்,…எங்கள் கட்சி மிகப்பெரியது.. கடைசி நேரம்வரை காத்திருந்து செய்வது தீர்மானிப்பது கடினமான காரியம் எங்களால் எதுவும் செய்யமுடியாது என ரெடிமேட் பதில் வரும்..
இவர்கள் என்னமோ நேர்க்காணல் மூலமாக மட்டுமே வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறமாதிரி என்று நமக்கும் கேட்கத்தோன்றும்..அப்படி கேட்பது அவர்களின் நேர்மை யை சோதிப்பதாக அமையும் என்பதால் விட்டு விடுவோம்.
Elumalai Venaktesan  (முகநூல் பதிவு)