கடலூர் மக்களுக்கு கை கொடுப்போம், வாங்க!

Must read

help

ணக்கம் நண்பர்களே!

சமீபத்திய மழை வெள்ளம் மக்களின் கண்ணீராய் பெருக்கெடுத்திருப்பதை நாம் அறிவோம்.

இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட இந்த வெள்ளத்தால் வீடு வாசல், சான்றிதழ்கள்.. ஏன் உயிர்களையும் இழந்து தவிக்கிறார்கள் மக்கள்.

இவர்களுக்கு உடனடி உதவியாக உணவு, குடிநீர், மருந்துகள் போன்றவைகளை பல்வேறு அமைப்புகளும், தனியார்கவளர்களும் அளித்துவருகிறார்கள்.

பெரும்பாலும் இந்த உதவி சென்னை மற்றும் சுற்றுப்புற வட்டார மக்களுக்கே கிடைக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்களின் பக்கம்… குறிப்பாக, கிராம மக்களின் பக்கம் கவனத்தைச் செலுத்துபவர்களுடன்  இணைந்திருருக்கிறோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட கிராமப்புற மக்களின் நிலையை அறிய ஒரு பயணம் சென்று வந்தோம்.

நாம் அறிந்தவரை, “அவர்களுக்கு தேவைப்படுவது இவைதான்:

சமைக்க தேவையான  பாத்திரங்கள், அரிசி, மற்றும் மளிகை சாமான்கள்.

குழந்தைகளுக்கான உடை மற்றும் அனைவருக்கும் காலணிகள்.

மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில், பள்ளிப்பை போன்றன.

பெண்களுக்கான புடவை, நைட்டி ஆண்களுக்கான டி சர்ட், வேட்டி, கைலி.

தொடர் மருத்துவ உதவிகள், மருந்துகள், சிகிச்சைகள்.

கட்டில்கள், போர்வைகள் மற்றும் டார்ச் லைட்டுகள்.

ஆகியவற்றை, patrikai.com  நிர்வாகம் அளிக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த சேவை பணியில் நமது வாசர்களும் கைகோர்க்கலாம்.

விருப்பம் உள்ள நண்பர்கள், தாங்கள் விரும்பும் உதவிப்பொருட்களை அலுவலகத்துக்கு முதல் கட்டமாக வரும் டிசம்பர் 25ம் தேதி வரை அனுப்பலாம். அதற்குரிய ரசீது  உடனடியாக அளிக்கப்படும். நன்கொடையாளர்கள் விவரம் நமது patrikai.com  இதழிலும் வெளியிடப்படும்.

வாருங்கள் நண்பர்களே…. இணைந்து  உதவுவோம்!

தொடர்பு கொள்ள:

எண்: 20, சாஸ்திரி நகர் முதல் அவின்யு,

அடையாறு, சென்னை:  600 020.

தொடர்பு எண்: 044 – 24469483

patrikaidotcom@gmail.com

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article