kk-tks

திமுகவின் தலைமைக் கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கேவன் ஆங்கில நாளிதழுக்கு  அளித்த பேட்டியில், “வரும் சட்டமன்றத் தேர்தலில்திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும்.  கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள். பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிக்கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில்திமுக தலைவர் கருணாநிதிக்கு உடன்பாடில்லை” என்றெல்லாம்   சொல்ல… அரசியல்வட்டாரத்தில், பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, “.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியால் என்னால் தூங்க கூட முடியவில்லை” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே டி.கே.எஸ். இளங்கோவன், கருணாநிதியைச் சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்திருக்கிறார். இத்தோடு இந்த விவகாரம் முடிந்துவிட்டதாக  திமுக தரப்பு சொல்ல ஆரம்பித்திருக்கிறது.

இது குறித்து மூத்த பத்திரிகையளர் பா. ஏகலைவன், “கடமை கண்ணியம் கட்டப்பாடு என்னானது.?”  என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவில் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.

அந்த பதிவு:
“யோக்கியமான ஒரு பதிலையுமே சொல்லவில்லை தி.மு.க. தலைமை.

அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன், ‘சிறுத்தைகளும்- பா.ம.க-வும் சாதிக் கட்சிகள். அதனோடு கூட்டணி வைக்க தலைமைவிரும்பவில்லை என்றதற்கு பொறுப்பான பதிலை சொல்லவில்லை அந்த தலைமை. அது அவரின் சொந்த கருத்து. கட்சியின் கருத்தல்ல என்ற ஒற்றை வரியோடு நின்றது.

இன்று 4-ம் தேதி இரவு அவரை நேரில் அழைத்து மன்னிப்புக் கடிதத்தை கேட்டு வாங்கியிருக்கிறது. அதில் நான் அப்படி பேசியது தவறு. மற்ற கட்சிகள் பேசிவருவதைபொருத்துக்கொள்ள முடியாமல்தான் நான் இப்படி பேசிவிட்டேன். கட்சி என்னை மன்னிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார். இது சரியானதா என்ற கேள்வி?

மற்ற கட்சிகள் பேசியதை பொருக்க மாட்டாமல் அப்படி பேசினேன் என்றால் உடனிருக்கும் கட்சிகள் ஒரு கருத்தையுமே சொல்லக்கூடாதா? இவர்களுடனான கூட்டணிக்காகஅடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு வாய்மூடி படுத்துக்கிடக்க வேண்டும் என்கிறதா தி.மு.க. தலைமை.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் அண்ணா. கலைஞர் கருணாநிதியும் அதையேதான் சொல்லி வருகிறார். எனில் டி.கே.எஸ். இளங்கோவனின் அரசியல்வளர்ப்பு! கேள்விக்குறியாகி நிற்கிறது.

கடந்த காலங்களில் மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக்கொண்ட பா.ம.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியை சாதி கட்சிகள் என கொச்சை படுத்தியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கிளர்ந்து வந்த ஒரே கட்சி, அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சிறுத்தைகள் கட்சியை சாதிக் கட்சி என்றுகூறி தீண்டத்தகாக கட்சியாக பேசியதற்குதண்டனை என்ன?

அந்த கட்சியோடு கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றால் அந்த மக்களின் வாக்குகளும் ‘சாதி வாக்குகள்’ வேண்டாம் என்று கூறுகிறார்களா? அல்லது அந்த ஒடுக்கப்பட்டமக்களுக்கான ‘தனித்தொகுதியும்’ சாதி தொகுதி. அதனால் தி.மு.க. அங்கே போட்டியிடாது என்று தலைமை சொல்லிவிட தயாரா? என்ற கேள்விகளுக்கு ஆளாக்கிய டி.கே.எஸ்.இளங்கோவன் மீது என்ன நடவடிக்கையை எடுக்கப்போகிறது.

தி.மு.க.வின் வரலாற்றில் இப்படி தனி நபர்கள், பெரிய விஷயத்தில் இப்படி பேட்டி கொடுத்திருப்பது இதுதான் முதல்முறை. எந்த ஒரு முடிவையும் கட்சியின் பொதுக்குழு,செயற்குழுவை கூட்டி முடிவெடுத்து பிறகுதான் கலைஞரேகூட பதில் அளிப்பார். பேராசிரியர் அன்பழகன் அவர்கள்கூட இப்படி திமிரோடு எதேச்சிகாரமாக பேசிடமாட்டார். ஏன்துரைமுருகன் பொன்முடி போன்ற மூத்த நிர்வாகிகள்கூட இப்படி எடுத்தெரிந்து பேசிவிட மாட்டார்கள். முடியாது.

ஆனால் இந்த டி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருக்கிறார்.

கடந்த காலங்களில் தி.மு.க.விற்கு தோள்கொடுத்து நின்ற பா.ம.க- விடுதலை சிறுத்தைகள் கட்சியை சாதி கட்சி என்கிறார்.

ஜி.கே.வாசன் பிரிந்து போய்விட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு பழைய பலம் இல்லை என்கிறார்.

மற்ற கட்சிகள் எல்லாம் பேசுவதை பொருக்க மாட்டாமல் நான் இப்படி பேசிவிட்டேன் என்கிறார்.

இதுவெல்லாம் கலைஞர் மட்டுமே பேசக்கூடிய பெரிய விஷயம். ஆனால் டி.கே.எஸ் இளங்கோவன் பேசியிருக்கிறார். இதற்கு பரிகாரம் மன்னிப்பு கடிதம் மட்டுமேவா?

அப்படி என்றால் தி.மு.க.வின் தாரக மந்திரமான ’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ எந்தளவில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா? கட்டுப்பாடை இழந்துவிட்டது எனஎடுத்துகொள்ளலாமா?

அண்ணா காலத்தில் இருந்து, கலைஞர் காலத்தில் தொடக்கம் முதல் இந்த கட்சிக்காக உழைத்த அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, இரா. செழியன், மதுரை முத்து,வீரபாண்டி ஆறுமுகம், வைகோ, மதுராந்தகம் ஆறுமுகம் ஆகியோரைப் போலவா இந்த டி.கே.எஸ். இளங்கோவன். அவரை விட்டுக்கொடுக்க முடியாது என்று மன்னிப்புகடிதத்தோடு விட்டுவிடுவதற்கு?

சரி எம்.ஜி.ஆர் என்ன செய்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என நீக்கியது ஏன்?

வைகோ என்ன செய்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்றதோடு கொலைப்பழி சுமந்தி நீக்கியதேன்.

ஏன் முன்னாள் அமைச்சர்கள் முல்லைவேந்தேன், பழனிமாணிக்கம் ஆகியோர்மீது கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நடவடிக்கை எடுத்தீர்களே. எப்படி?

அப்படி என்றால் டி.கே.எஸ். இளங்கோவன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறாமல், கலைஞரின் அனுமதியோடுதான் பா.ம.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சாதிக்கட்சி என்றாராஎன்ற கேள்வி?

இல்லையில்லை என்றால் கட்டுப்பாட்டை மீறியவருக்கு மன்னிப்புக் கடிதம் மட்டுமே நடவடிக்கையாக இருக்கும் என்பது சரியா?

நாளைக்கு இன்னொரு செய்தி தொடர்பாளராக இருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களும் மற்ற கட்சிகளின் மனதை எல்லாம் ரணப்படுத்தும் பேட்டியைக் கொடுத்துவிட்டுவந்து நின்றால் மன்னிப்போடு விடுவீர்களா?

இரண்டு கேள்விகளுக்கான பதிலையும் அந்த இரண்டு சாதி கட்சிகளும் கேட்டுப் பெற்றாக வேண்டும். இல்லை என்றால் அது அந்த கட்சிகளை சார்ந்து நிற்கும் மக்களுக்கு செய்ததுரோகமாகும்.

அதேபோன்று காங்கிரஸ் கட்சி இளங்கோவனும் ‘நாங்கள் பலம் இழந்துவிட்டோமா’ என்ற பதிலை கேட்டு பெறவேண்டும். இல்லை என்றால் அதுவும் தன் கட்சி தொண்டர்களுக்குதுரோகம் இழைத்ததாக மாறும்.”

–       இவ்வாறு தனது பதிவில் பா. ஏகலைவன் எழுதியுள்ளார்.