ஐ.பி.எஸ். அதிகாரி சென்னையில் மர்ம சாவு:  அதிகமாக மது அருந்தியது காரணமா?

Must read

download
சென்னையில் பணியாற்றிய கர்நாடகாவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீதமாக மது அருந்தியதால் மாரபடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஸ் (33). 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவு அதிகாரியான இவர் உதவி போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) அந்தஸ்தில் இருந்தார். மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சென்னைத்து  சென்னையில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் விருந்தினர் இல்லத்தில் அறை எண் 104ல் ஹரிஸ் தங்கி இருந்தார்
நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்ற அவர் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை.  எனவே அவரது  கார் ஓட்டுனர்,  ஹரீசின்  செல்போனுக்கு தொடர்பு கொண்டார். நீண்டநேரம் ஒலித்தும் மறுமுனையில் போன் எடுக்கவில்லை.
ஆகவே,  விருந்தினர் மாளிகை ஊழியர்கள் ஹரிஸ் தங்கிருந்த அறை ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது தனது படுக்கையில் ஹரீஷ்  சடலமாக கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த எழும்பூர் போலீசார் விரைந்து வந்து, ஹரீசின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர்.
2009ம் ஆண்டில் இவருடன் பணயில் சேர்ந்த மற்ற போலீஸ் அதிகாரிகள் அனைவரும் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள நிலையில் ஹரிஸ் மட்டும் ஏ.எஸ்.பி.யாகவே பணியை தொடர்ந்து வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்று கூறப்படுகிறது.
ஹரீசின் அறையில் ஏராளமான மது பாட்டில்கள் இருந்தன. மது அருந்தும் பழக்க முள்ள அவர், நேற்று அதீதமாக மது அருந்தியிருக்கலாம். அதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹரீஷுக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த வாரம்தான், பெங்களூர் அடுத்த ஹோசக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

More articles

Latest article