ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிராவத அமைப்பில் சேரமறுத்த 11 வயது சிறுவன் சுட்டுக் கொலை:
உ.பி.மா நிலம் அலகாபாத் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிராவத அமைப்பில் சேரமறுத்த 11 வயது சிறுவனை டியூசன் ஆசிரியர்  சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
FotorCreated77678
ரவி பால் என்ற 11 வயது மாணவன் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். இச்சிறுவனை இர்பான் என்ற டியூசன் ஆசிரியடம் அவனுடைய பெற்றோர் சேர்த்து விட்டுள்ளனர்.டியூசனுக்கு வந்த மாணவன்  ரவிபால்  கொலை செய்யப்பட்டுக் கிடந்தான். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரனை நடத்துகின்றனர்.
இந்நிலையில் சிறுவன் ரவிபாலை கொலை செய்தவர் டியுசன் ஆசிரியர் இர்பான்தான் என்றும் அவர் தன்னுடைய மகனை ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிராவத அமைப்பில் சேர வலியுறுத்தியதாகவும் ஆனால்  அதற்கு அவன் மறுத்து விட்டதால் கொலை செய்யப்பட்டு விட்டாதகவும் கூறியுள்ளார். ஆனால் அவருடைய குற்றச்சாட்டை ஏற்கும்படியான ஆதாரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.