ஐஎஸ்ஐஎஸ் பிடியில் இருந்து ஸ்வீடனை சேர்ந்த இளம் பெண் மீட்பு

Must read

145657425193440
குர்தீஷ்:
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில் சிக்கி தவித்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது இளம் பெண் மீட்கப்பட்டார்.
வடக்கு ஈராக் பகுதியில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கவராத அமைப்பின் பிடியில் சிக்கி தவித்த 16 வயது இளம் பெண்ணை குர்திஷ் சிறப்பு படையினர் கடந்த 17ம் தேதி மீட்டனர்.
அவர் கூறுகையில், ‘‘கடந்த 2105ம் ஆண்டு மத்தியில்எதனது ஆண் நண்பரை பார்ப்பதற்காக சென்றேன். இருவரும் நல்ல முறையில் பழகி வந்தோம்.
இதன் பின்னர் எனது ஆண் நண்பர் ஐஎஸ்ஐஎஸ் ( இந்த அமைப்பை வேறு ஒரு பெயர் சொல்லி குறிப்பிட்டார்) தொடர்பான வீடியோ காட்சிகளை தொடர்ந்து பார்த்து வந்தான். அந்த அமைப்பில் சேர ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தான். எனக்கு இந்த அமைப்பு குறித்து எதுவும் தெரியாது. அதனால் நான் அங்கு செல்ல சம்மதித்தேன்.
கடந்த ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் இருந்து பஸ் மற்றும் ரயில் மூலம் துருக்கி எல்லை பகுதியில் உள்ள காசியாந்தெப் மாகாணத்தை அடைந்தோம். சிரியாவினுள் செல்வதற்காக காத்திருந்தோம்.
அங்கு வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், இன்னும் சில ஆண் மற்றும் பெண்களுடன் எங்களையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். ஈராக் அருகில் உள்ள மொசூல் நகரத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாத ஒரு வீட்டில் எங்களை தங்க வைத்தனர்.
என்னிடம் பணம் எதுவும் இல்லை. அங்கு வாழ்ந்தது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எதிர்பாராதவிதமாக எனக்கு ஒரு போன் கிடைத்தது. அதன் மூலம் எனது அம்மாவை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வர வேண்டும் என தெரிவித்தேன். ஸ்வீடனில் எனக்கு எல்லாம் கிடைத்தது. ஆனால் இங்கு எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை’’ என கூறினார்.
இதன் பின்னரே அவர் மீட்கப்பட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண்கள் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தங்களது நாடுகளில் இருந்து வெளியேறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் மற்றும் சிரியாவிற்கு வந்துள்ளனர்.
ஒரு தாய் தனது 14 வயது மகனுடன் சேர வந்துள்ளார். ஆனால் அவர் ராணுவத்தினரிடம் சிக்கியதால், இங்கிலாந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

More articles

Latest article