ஏமாந்த நடிகை

Must read

e

“அழகு, திறமை இருந்தால் மட்டும் போதாது.. சூதானமாக இருந்தால்தான் திரையுலகில் தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் சம்பந்தமே இல்லாதவர்கள் எல்லாம் நம் பெயரைச் சொல்லி ஏமாற்றிவிடுவார்கள்” என்று பாடம் எடுக்கும் அளவுக்கு பட்டுவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

is

விஜய்சேதுபதி உடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், படங்களிலும் தேசிய விருது பெற்ற “காக்கா முட்டை” படத்திலும் தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தாரே அந்த  ஐஸ்வர்யா ராஜேஷ்தான்.

அப்படி என்ன நடந்தது?

இவருக்குத் தொடர்பே இல்லாத நபர் ஒருவர், தான்தான் ஐஸ்வர்யாவின் மேனேஜர் என்று பீலா விட்டு சுற்றியிருக்கிறார். இவரது ஆடம்ப தோற்றத்தைப் பார்த்து ஏமாந்த சிலர், ஐஸ்வர்யா கால்ஷீட்டுக்காக இவரிடம் அட்வான்ஸ் (!) கொடுத்திருக்கிறார்கள்!

 

விஷயம் லேட்டாகத்தான் தெரிந்திருக்கிறது ஐஸ்வர்யாவுக்கு. பதறிப்போனவர், இனியும் தனக்கென மேனேஜர் இல்லாவிட்டால் சிக்கல்தான் என்பதை உணர்ந்து  நடிகர் ஜீவாவின் பி.ஆர்.ஓ.வான யுவராஜை மானேஜராக அப்பாயிண்மெண்ட் செய்துவிட்டார்.

“சினிமாவுல தூங்கறப்ப கூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும். அத்தனை உஷாரா இல்லேன்னா நம்மை காலி பண்ணிடுவாங்க” என்று எப்போதோ கண்ணதாசன் சொன்னது இப்போதும் பொருந்துகிறது.

 

More articles

Latest article