மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் எல்கேஜி படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டான்
parent.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திராநகர் பகுதியை சேர்ந்த சுரேஸ் என்பவரின் மகன் அந்தோணி. அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் படிக்கும் எல்கேஜி மாணவியை கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
இதுபற்றி வகுப்பு ஆசிரியையிடம் சிறுமி அழுதுகொண்டே தெரிவித்துள்ளாள்.  இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்ய வலியுறுத்தி பள்ளி இருக்கும் பாளையங்கோட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி பள்ளி தாளாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியா பள்ளிக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்தனர். சிறுமியை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.