எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை : உலக அளவில் இந்தியா 3 ஆவது இடம்

Must read

AIDS
எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை : உலக அளவில் இந்தியா 3 ஆவது இடம்

புதுடெல்லி
எய்ட்ஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமான எச்.ஐ.வி.கிருமிகள் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
நேற்றையை ( மார்ச் -11) மக்களைக் கூட்டதில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா  கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
2015 ஆம் ஆண்டுக்காக மதிப்பீட்டு அறிக்கைப்படி இந்தியாவில் 21.17லட்சம் பேர் எச்.ஐ.வி.கிருமியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் உலக   நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 ஆவது இடம் பெற்றுள்ளது. முதலிடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.இங்கு 68 லட்சம் பேர் எச்.ஐ.வி.பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அடுத்து  34 லட்சம் எ.ச்.வி.நோயாளிகளைக் கொண்டுள்ள நைஜீரியா 2 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article