11
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ட்ரான்ஸ் லிங்க் மீடியா T.K.ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ‘கபாலி தோட்டம்’.
இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக புதுமுகம் விக்கி மற்றும் எம் .ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் இருவரும் நடிக்கிறார்கள்.  எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா – விஜயன் தம்பதியின் மகன்தான் ராமச்சந்திரன்.  நாயகியாக புதுமுகம் அனிஷா நடிக்கிறார். மேலும் ‘கோலிசோடா’ வில்லன் மதுசூதனனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
மற்றும் கே,ராஜன், ‘ரோபோ’ சங்கர், தில்லி ஆர்.முகுந்தன், தாஸ் பாண்டியன், சுமலதா, ராதா, அருண் பாண்டியன், தஞ்சை தமிழ்பித்தன், பா.கி, P.K.இளமாறன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை ஆகியோரும் நடிக்கிறார்கள்.
12
T.R.பாஸ்கர் எழுதி இயக்கும் இந்தப் படத்திற்கு யு.கே.முரளி இசையமைக்க பிரியன் பாடல்களை எழுதுகிறார்.
இந்தப் படத்திற்கான தொடக்க விழா இன்று காலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குநர்கள் பேரரசு, சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சவுந்தர்ராஜா, சித்ரா லட்சுமணன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
படம் பற்றி இயக்குநர் பாஸ்கர் பேசும்போது, “தீயதைத் தீயிட வருவான் என்பதுதான் படத்தின் ஒன் லைன். சென்னையில் நடந்த ஒரு உண்மைக் கதையை வைத்து எடுக்கவிருக்கிற கமர்ஷியல் படம்தான் இது…” என்றார்.
மொத்தப் படமும் சென்னையில் படமாக்கவிருக்கிறது.