பிரபல கவிஞர் பல்லடம் ராசு, முகநூல் பிரபலங்களில் ஒருவர். இவரது பதிவுகள் வித்தியாசமான கோணத்தில் ரசிக்கத்தக்க நடையில் இருக்கும். அவரது சமீபத்திய பதிவு இது:

10438469_424917397684883_1898228857101274467_n

 ன் பெயர் ராசு .
அடைமொழி எதுவுமற்ற ராசு . யாரும் சுருக்க முடியாத சுருக்கவும் அவசியமற்றது ராசு எனும் ரெண்டெழுத்து பெயர் . ராசுவின் பின்னால் இணைத்துக் கொள்ள பட்டம் எதுவுமில்லை . பட்டத்தை நோக்கிய பயணத்தில் பாதி வழியிலேயே அப்பா எனும் நூல் அறுந்துவிட்டது அகாலமாக . தப்பித்தது ராசு எனும் பெயர் . ராசு M B B S dch pl ke என்பது நன்றாகவா இருக்கிறது ?
அதேபோல் தான் பிச்சுவா ராசுவாகவோ கத்திக்குத்து கந்தன் மாதிரி கத்திக்குத்து ராசுவாகவோ மாறிவிடும்படி பல சூழ்நிலைகளின் முன் நான் நின்றிருந்திருக்கிறேன் . பகுத்தறிவை பயன்படுத்துபவன் நான் . என்னை அப்போதெல்லாம் காப்பாற்றியதும் ‘ வுடு ஜூட் ‘ என்று எச்சரிக்கை செய்ததும் அந்த அறிவு தான் . அப்போதெல்லாம் பேடி ராசு என்ற அடைமொழி சில காலம் ஒட்டிக்கிடக்கும் . ஏனோ காலப்போக்கில் அது நிறைய முறை மறைந்து விடுகிறது . நானொன்றும் வீர சாகசம் புரிவதில்லை அதை மறைக்க .

பேருந்தில் டிக்கெட் எடுத்தவுடன் என் பாக்கெட்டிலிருக்கும் சொற்ப ரூபாய்களை பாதுகாப்பதிலேயே என் கவனம் இருந்தபடியால் பிளேடு ராசுவெல்லாம் உருவாக வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது .
வீடு சுரேஷ் குமார் , யமஹா கணேசன் , ரோமியோ கோவிந்து , லவ்லி அருண் , ஸ்டைல் கார்த்திக் … இவர்களை எல்லாம் பார்க்க சில நேரம் ஆச்சரியமாக இருக்கும் . நல்ல வேளை பொறாமை வந்ததில்லை .
ஆனால் இப்படியே இருக்க போர் அடிக்கிறது . விரைவில் ஒரு அடைமொழி ராசுவாக வேண்டும் . அதற்காக மைனர் குஞ்சு மாதிரியெல்லாம் அல்ல .
பிறகெப்படி ?
ரொம்ப ஒசத்தியா இருக்கணும் . அத யாராவது சொல்லி கூப்பிட்டாலே நமக்கு டவுசர் நழுவணும் ! அந்த மாதிரி .
இப்படி யோசிச்சு யோசிச்சு ஒரு பிரிவும் கிடைக்கல . தூக்கம் கெட்டது தான் மிச்சம் . ஆனா இந்த ரெண்டு வாரமா� என்ன பார்தாலே எல்லாரும் ஒதுங்கி போறாங்க . பார்த்து பார்த்து எதோ பேசறாங்க . அதுவும் காதுல விழுகுது . பாவம் பைத்தியம்ங்கற வார்த்தை அதிகமா அடிபடுது அவங்க பேச்சுல . அவங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனையோ ஒட்டுமொத்தமா . !
அவங்கள பத்தி எனக்கென்ன . என் பிரச்சனை எனக்கு!”