கிரிக்கெட்

ங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் தோனியின் பீஹாரில் இருந்து அடுத்த தலைமுறை ஆட்டக்காரராக களம் இறங்கியிருக்கும் இஷான் கிஷண் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சாதனைகள் பல புரிந்த அனுபவ வீரரான ராகுல் டிராவிட்.

இந்த இரண்டு காரணங்களால், நிச்சயமாக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று உற்சாகத்துடன் சொல்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.

நேற்று முன்தினம் இலங்கையில்  நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கையை அசத்தலாக வீழ்த்தி இந்திய இளையோர் அணி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை அணிக்கு ரிஷப் பண்ட் துணக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சர்பராஸ் கான், அர்மான் ஜாபர், ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும் இந்த அணியில் சேர்க்கப்பட்டிருப்பது தமிழக ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்திருக்கிறது.