உண்மையான அஞ்சலி !!

Must read

kalam-kadhal

இந்தப் பெயரை கேட்டவுடன் குழந்தைகளும்

விரும்பும்…!

இளைஞர் கூட்டம் ஓடிவரும்…

நமக்கு

உற்சாகம் தரும் சக்தி…

நமை தேடி வருகிறது என்று..!!

தனது கடமை முடித்து

சென்று விட்டார்…!!

கோடிகளை சம்பாதித்து

சொத்துக்கள் சேர்க்கவில்லை…!!

கோடான..கோடி மக்களின்

இதயங்களில் நீங்கா…

இடம்பெற்ற உன்னத தலைவரானார்..!!

தமிழர்களின் பெருமை…இந்திய தேசத்தின் சொத்து..!!

உலகத்தலைவர்கள்

அனைவரும் விரும்பும்

முத்து..!!

நாம் அவருக்கு செய்யும்

உண்மையான அஞ்சலி…

சில துளிகள் கண்ணீர் மட்டும் சிந்தி….இன்றுடன்

மறந்துவிட வேண்டாம்…!!

நம் வீட்டு குழந்தைகளுக்கு..

அவர் எழுதிய புத்தகங்களை

படிக்க கொடுப்போம்…!

மரக்கன்றுகள் கொடுத்து..

நடச்சொல்வோம்…!!

பூமி வெப்பமயமாவதை

தடுக்கச் செய்வோம்…!!

குழந்தைகள்…இளைஞர்கள்

தனித்திறமை வளற…

துணை நிற்போம்…!!

நம் ஆசைகளை …பிள்ளைகள் மேல் திணிப்பதை தவிர்ப்போம்…!!

தொலைக்காட்சி பார்ப்பதை

தவிர்க்கச் செய்வோம்…!!

புதிய சிந்தனை..புதிய கண்டுபிடிப்புகள் உருவாக

உறுதுணையாக இருப்போம்..!!

நேர்மையற்ற வழிகளில்

பணம் சம்பாதிக்க வேண்டாம்…!

அரசாங்கம்…அதைச்செய்யவில்லை

இதைச்செய்யவில்லை என்று

குறை கூறுவதை தவிர்ப்போம்…!!

ஊழலற்ற இந்தியா உருவாக…..நேர்மையான

அரசியல் தலைவர்களை

ஓட்டுரிமை மூலம்

தேர்ந்தெடுப்போம்…!!

இதயபூர்வமாய் இதனை

நாம் செய்தால்….

இந்தியா நல்லரசாகும்…

வல்லரசாகும்…!!

இதுவே ….உன்னத

தலைவருக்கு ….நாம்

செய்யும் ..உண்மையான அஞ்சலி…!!

ஜெய்ஹிந்த்..!

-அ.முத்துக்குமார்

More articles

Latest article