உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி இருவரை கொன்ற  ஐஎஸ்ஐஎஸ்!

Must read

isis

டமாஸ்கஸ்:

தங்கள் இயக்கத்தவர்கள் போல் நடித்து, வேவு பார்த்ததாக இரண்டு ஆண்களை, அவர்களுத உடலில் குண்டு வைத்து வெடிக்கச் செய்து கொலை செய்திருக்கிறார்கள் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகள். இதை பதிவு செய்து, இணையதளங்களில் உலவவிட்டிருக்கிறார்கள்.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கம்,  உலகையே அச்சுறுத்தி வருகிறது.  பொது இடங்களில் மனிதர்களை துடிக்கத்துடிக்க கழுத்தை அறுத்து கொல்வது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர்களை சந்தையில் ஏலம் போட்டு விற்பது என்று பல்வேறு கொடூரங்களை செய்துவருகிறது இந்த இயக்கம்.

ஆனாலும் இந்த இயக்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்துவருகிறார்கள். அப்படி சமீபத்தில் இந்த இயக்கத்தில் சேர்ந்த இருவர், உளவு பார்க்க வந்திருப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தலைமை நினைத்தது.

ஆகவே அவர்களை கொடூரமாக கொலை செய்ய முடிவு செய்து, அதை வீடியோ எடுத்து இணையத்தில் பரவவிடவும் தீர்மானித்தது.

அந்த வீடியோவில் வரும் காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. ஒரு சிதைந்த கட்டிடத்தின் உள்ளே இரண்டு ஆண்கள் கயிறால் கட்டப்பட்டு அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கண் முன்னே, குண்டுகள் பற்ற வைக்கப்படுகின்றன. மரண பீதியில்  அந்த இருவரும் அமர்ந்திருக்கிறார்கள்.  பிறகு ஒரே புகை மண்டலம். அதன் பிறகு ஒரு கட்டிடம் இடிந்து விழும் காட்சி வருகிறது. அதாவது அந்த இருவரும் கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதி வெடிகுண்டால் சிதறுகிறது. இருவரும் உள்ளேயே சமாதி ஆகிவிட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.

தங்களை வேவு பார்த்தால் இதுதான் தண்டனை என்று உலகிற்கு காண்பிப்பதற்காக இந்த வீடியோவை ஐ.எஸ் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article