இளம்பெண் குத்திக் கொலை:  கணவர் தலைமறைவு

Must read

மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இளம்பெண் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான இளம்பெண்ணின் கணவர் தலைமறைவு.
workhop wife killed
திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே உள்ள திருவேங்கடநகரை சேர்ந்த ஒர்க்ஸாப் உரிமையாளர் ஜெரால்டு. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய மனைவி பெயர் தெரசா.
சம்பவத்தன்று போலீசாருக்கு ஒர்க்சாப்புக்குள் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, ஸ்பாட்டு வந்த போலீசார் ஒர்க்சாப் பூட்டியிருப்பதை கண்டு வியந்தனர்.
சந்தேகத்தின் பேரில் ஒர்க்சாப்பின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வயிற்றில் ரத்த காயங்களுடன் தெரசா பிணமாக கிடந்தததை கண்டன. அவருடைய வயிற்றில் கத்தியால் குத்தியது போன்ற ரத்த காயங்கள் இருந்தன.
போலீசாரின் விசாரணையில் கணவரும், மனைவியும்  காலை 11 மணி அளவில் சேர்ந்தே ஒர்க்சாப்புக்கு வந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் கணவர் ஜெரால்டிடம் விசாரணை நடத்த போலீசார் முற்பட்டபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். தெரசா கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அந்த பகுதி மக்கள்  கொலை நடந்த இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

More articles

Latest article