இலங்கை தமிழ்ப்பகுதிகளில் முழு அடைப்பு வெற்றி!

Must read

11219663_10207299778509522_8351414478875318784_n

யாழ்ப்பாணம்:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­ட­வேண் டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உடன் நீக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்தி இலங்கை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நேற்று நடந்த முழு வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது.

இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தனது தேர்தல் பிரச்சாரத்தில் “சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்றுவரை அதை நிறைவேற்றவில்லை.

இதையடுத்து தமது விடு­தலை தொடர்­பாக வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­வேற்­ற வேண்டும் என்று கோரி, தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் ­போ­ராட்­டத்தை துவங்கினர்.

இந்­நி­லையில் அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவளித்து இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி ஆகி­யன இந்த அழைப்பு விடுத்தன. அத்துடன் ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகளும் ஆதரவளித்தன.

மேலும், வடக்கு மாகாண சபை, சர்­வ­மத தலை­வர்கள், வர்த்­தக சங்­கங்கள், தொழிற்­சங்­கங்கள், கல்விச் சமுகம், பல்­க­லைக்­க­ழக சமுகம், சிவில் அமைப்­புக்கள், பொது அமைப்­புக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், இந்து, கத்­தோ­லிக்க அமைப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து தரப்பினரும் முழு அடைப்புக்கு ஒத்துழைப்பு அளித்தன.

இதையடுத்து நேற்று வடக்கு, கிழக்கு பகுதியில் முழு கடை அடைப்பு அமைதியாக வெற்றிகரமாக நடந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்தும் பெரும்பாலும் இல்லை.

இதையடுத்து தமிழர் அமைப்புகள், “உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதையேம க்கள் விரும்புகிறார்கள். மக்களின் உணர்வை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி உள்ளன.

 

More articles

Latest article