இன்று: 1: கலைவாணன் என்.எஸ்.கே. பிறந்தநாள்

Must read

kalaivanar

தமிழ் திரைத்துறையில் ‘கலைவாணர்’ என்று போற்றப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினம்.
நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை புகுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர்.

“சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு உதாரணமாகும். தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளை அள்ளித்ததந்த அற்புத கலைஞர்.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்த இவர், இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சுமார் ஐம்பது ஆண்டுகள், நகை்சசுவையை அள்ளிக்கொடுத்த கலைவாணர் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.

More articles

Latest article