இன்று: வல்லிக்கண்ணன் பிறந்தநாள்

Must read

12195915_973825866009050_7284961844997295004_n

ன்று தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920) பிறந்த நாள்.

எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர்.  பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் வெளியீடு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

“சமீப காலமாக, விரும்பத்தகாத வேறு அலைகள் தமிழ் எழுத்து – பத்திரிகை உலகத்தில் தலை தூக்கி விளையாடுகின்றன. பிராமண எழுத்தாளர், பிராமணர் அல்லாத எழுத்தாளர், பண்டித மனோபாவம் உள்ளவர், தனித்தமிழ் பற்றாளர், வட்டார வழக்கு பண்பை வளர்ப்பவர், சுத்த இலக்கியப் போக்கினர், சமூகப் பார்வை உடைய முற்போக்கு இலக்கிய வாதிகள், அரசியல் கட்சி சார்பு உடையவர்…… இப்படி பல அடிப்படையில், எழுத்துக்களுக்கு முன்பாக எழுத்தாளர் கவனிக்கப்பட்டு, அபிப்பிராயங்கள் உருவாக்கப்படுவதும் அவ்வாறு பிரசாரம் செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது” – இது வல்லிக்கண்ணனின் வருத்தம் தோய்ந்த கருத்துக்கள்.

 டி.பி. ஜெயராமன்

More articles

1 COMMENT

Latest article