12548910_1009486375776332_1494757914031670105_n
இன்று ராமலிங்க வள்ளலாரின் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கட லூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5.10.1823-ல் பிறந்தார்.
இவர் அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். வேதம் ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அதில் உண்மையை சொல்ல வில்லை. என்று வள்ளலார் வலியுறுத்தினார். இந்து சமயத்தில் பல மூட நம்பிக்கைகளுக்குக் காரணமாக உள்ள எண்ணற்ற சிறு தெய்வங்களின் வழிபாட்டை மக்கள் கைவிடவேண்டுமென்று வலியுறுத்தினார். இறைவன் ஒன்றே. அவன் ஜோதிவடிவ்த்தில் இருக்கிறான். என்று நம்பினார். அதனையே அனைவருக்கும் போதித்தார். அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், அவரை அன்றைய சைவவாதிகள் ஏற்கவில்லை. வள்ளலார் வள்ளலாரின் கருத்துக்களுக்கு கண்டனம் செய்தனர். வள்ளலார் முன் வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர்.
வள்ளலார் தான் நிறுவிய சத்திய ஞானசபையின் சித்தி வளாகத்தில்,. 1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் திரு மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்குச் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார். அதன் பிறகு அவரை யாரும் காணவில்லை. அவர் அருட்பெரும் ஜோதியில் கலந்து விட்டதாக அவரது அடியார்கள் நம்புகின்றனர். இராமலிங்க அடிகளார் வள்ளலார் வகுத்த வாழ்க்கை நெறிகள் அடங்கிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பிற்கு பெயர் – திருவருட்பா.

  •  டி.பி. ஜெயராமன்