download
 
ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்தாள் (1896) 
தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என்று பன்முகம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. . இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் சிறந்து விளங்கினார்.  . இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது.  உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர்.
சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது.  கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.
இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ‘முனைவர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி “வெள்ளிவிழா” எடுத்தும், “இலக்கியப் பேரறிஞர்” என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. சேதுப்பிள்ளை ஏபரல் 25, 1961ல் தம் 65 -ஆம் வயதில் இறந்தார். இவருடைய நூல்கள்நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
 
 
download (1)
குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்தநாள் ( 1935)
கர்நாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படும், குன்னக்குடி வைத்தியநாதன், இசை அமைப்பாளராகவும் விளங்கினார்.  .
நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என்று இவர் புகழப்படுகிறார்.
ஆரம்ப காலத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி வைத்தியநாதன், பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.
காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டதை மாற்றி  வலயப்பட்டி சுப்பிரமணியத்தின்  தவிலுடன் கச்சேரிகளைச் செய்துள்ளார். கர்நாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தவர். .
வா ராஜா வா (1969) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார்.  திருமலை தென்குமரி (1970) எனும் திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார்.மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 வருடம் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.
 
download (2)
சரோஜினி நாயுடு  நினைவு நாள் (1879)
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு சிறந்த கவிஞராக விளங்கினார்.  கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் என்று பன்முகம் கொண்டவராக விளங்கினார்.
. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவர்,   உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனர் என்று பலவித சிறப்பு பெற்றவர். இவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
 
download (3)
யாஹூ!  துவக்கம் 
இணையதள சேவையில் முதன்மையான யாஹூ இணையதளம்  1995ம் ஆண்டு இதே நாளில் மக்களின் பயனபாட்டுக்கு வந்தது.  ” இதன் தலைமை அலுவலகம்கலிபோர்னியாவில் உள்ளது.