1
 
பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் (1933)
தமிழ்த்தேசியத்தந்தை என்று தமிழ்த்தேசியவாதிகளால் அழைக்கப்படும்  பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின்தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராவார்.  தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகளை பரப்பியவர்.   இவரது கவிதைகள் பல பேசப்பட்டவை. இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை பலவற்றில் ஈடுபட்டு இருபது முறைக்கு மேல் சிறை  1995ம் ஆண்டு  ஜூன் 11ம் தேதி மறைந்தார்.
பெருஞ்சித்திரனாரின் கவிதை ஒன்று:
உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?
உந்தன் குடும்பம் உந்தன் வாழ்க்கை
உந்தன் நலங்கள் உந்தன் வளங்கள்
என்று மட்டும் நீயும் ஒதுங்கி இருந்துவிடாதே!
நீ இறந்தபின்பும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே!
சொந்தம் பேசி சொந்தம் வாழ
சொத்து நிலங்கள் மனைகள் சேர்க்க
என்று மட்டும் வாழ்ந்துபோக எண்ணிவிடாதே!
நீ இருந்து சென்ற கதையை மறக்க பண்ணிவிடாதே!
அன்னை நிலமும் அன்னை மொழியும்
அனைத்து மக்கள் வாழ நினைக்கும்
உன்னை உலகம் மறப்பதில்லை ஒதுங்கிவிடாதே!
நீ உழைக்கும் உழைப்பில்
உலகம் செழிக்கும் பதுங்கிவிடாதே!
 
2
 
பழ. நெடுமாறன் பிறந்தநாள் (1933)
நெடுமாறனும் தமிழ்த்தேசிய அரசியலில் முக்கிய தலைவர் ஆவார். ஆரம்பகாலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரஸ்  இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை  பாதுகாத்தவர் பழ. நெடுமாறன்.  அதனால் இந்திரா காந்தி அவர்களால் “என் மகன்“ என்று அன்புடன் அழைக்கப்பட்டார் . காமராஜர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு “மாவீரன்” என்று பெயர் சூட்டினார்.
காங்கிரசை விட்டு கருத்து வேறுபாடுகளால் வெளியேறிய நெடுமாறன், , காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.