download (2)
வீரமாமுனிவர் நினைவு நாள்
வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி.. இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார்.  இறை ஈடுபாடு கொண்ட இவர்,  இயேசு சபையைச் சேர்ந்த குருவாக ஆனார்.  கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு  தமிழகத்துக்கு வந்தார்.
 தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்தார். . 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாகும். .
மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்.   செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதால்,  தமது இயற்பெயரின் அர்த்தம் தொனிக்க செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
 
download
இலங்கை விடுதலை நாள் (1948)
இலங்கை  இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து மகா சமுத்திரத்தில் உள்ள தீவு. இங்கு சுமார் தாழ 20 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு  ஆகும்..
இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகும்.  சிங்களவர், பூர்வகுடிதமிழர்,, இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர்,  ஆகியோரின் தாயகமாகும்.  இலங்கை அதிபர் முறைமூலம் குடியரசு மற்றும் ஒற்றையாட்சி அரசால் ஆளப்படும் நாடாக விளங்குகிறது.
இலங்கை “இந்தியாவின் கண்ணீர்த் துளி” என அதன் வடிவம் மற்றும் அமைவிடம் என்பவற்றால் குறிக்கப்படுகின்றது “இந்து சமுத்திரத்தின் முத்து” என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படுவதுண்டு. மேலும், இது “புன்னகைக்கும் மக்களின் தேசம்” எனவும் அறியப்படுவதுண்டு. இத்தீவு வெப்பமண்டலக் காடுகளையும் உயர் உயிரியற் பல்வகைமை கொண்ட பல்வேறுவகையான இயற்கை அமைப்பினைக் கொண்டது.
 
இலங்கையின் முக்கிய நகரங்களாகக் கண்டி, காலி, குருநாகல்,அநுராதபுரம், யாழ்ப்பாணம், நுவரேலியா,திருகோணமலை, மட்டக்களப்பு என்பவை காணப்படுகின்றன.
வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் பூர்குடிகளான தமிழ் மக்கள் தங்களுக்கு சம உரிமை வேண்டி பலவித போராட்டங்களில் ஈடுபட்டு, பிறகு 1980 முதல் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.  முப்பதாண்டுகளுக்கு மேலான அந்த போராட்டம் 2009ம் ஆண்டு இலங்கை அரசு மற்றும் பல நாடுகள் சேர்ந்து முறியடிக்கப்பட்டது. தற்போதும் அங்கு பூர்வகுடிகளான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், அமைதியான வழியில் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.
வெள்ளையர் ஆட்சியிலிருந்து 1948ம் ஆண்டு இதே நாளில் இலங்கை விடுதலை பெற்றது.
img1130204034_1_1
உலக புற்றுநோய் தினம்
ஒவ்வொரு வருடமும்  பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.  இந் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் முன் காப்போம் என்று நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
 2030 இல் வருடத்திற்கு 21.4 மில்லியன் பேரை புற்றுநோய் தாக்கும் என்கிறது சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம். 
புற்று நோய் பற்றி பலவித தவறான நம்பிக்கைகள் பரவியிருக்கின்றன. அவை பற்றி நாம் அறிவது அவசியமாகும்.
நம்பிக்கை : புற்றுநோய் என்பது நன்கு ஆரோக்கியமான, முதிர்ந்த, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மாத்திரமே ஏற்படுகிறது.உண்மை : புற்றுநோய் உலக பிரச்சினையாகும். அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது. 
நம்பிக்கை : புற்றுநோய் என்பது ஒரு மரண தண்டனை.  
உண்மை : புற்றுநோயை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள்.
நம்பிக்கை : புற்றுநோய் என்பது தலைவிதி.உண்மை : நீங்கள் போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும்.