1
மொரார்ஜி  தேசாய்  பிறந்தநாள் (1896)
இந்திய விடுதலைப்போராட்ட வீரரரான இவரே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் இந்திய பிரதமர் ஆவார்.  பிரதமர் இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலை காலத்துக்குப் பிறகு, நடந்த தேர்தலில் எதிர்க்க்கட்சிகள் பல இணைந்து ஜனதா என்ற கட்சியை உருவாக்கி போட்டியிட்டன. அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட இவர் வென்று 1977ம் ஆண்டு பிரதமர் ஆனார். குறுகிய காலமே பிரதமராக இருந்தாலும், சிறந்த நிர்வாகம் மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவராக விளங்கினார்.
இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
 
2
ருக்மிணி தேவி அருண்டேல்  பிறந்தநாள் (1904)
மதுரையில் பிறந்த ருக்மணி தேவி, புகழ்பெற்ற நடனக் கலைஞராக விளங்கினார். சென்னையில் கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர்.. . சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.
பிறப்பும் இறப்பும்
உலகின் குறிப்பிடத்தக்க நபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர் ஜேம்ஸ் வில்சன் (1812-1880) என்பவரே பெப்ரவரி 29 இல் பிறந்து அதே நாளில் இறந்தார்.