12734140_1056671167717549_9037090526724371341_n
தெளிவத்தை ஜோசப்  பிறந்தநாள் (1934)
இலங்கை மலையகப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான  தெளிவத்தை ஜோசப்  இலங்கை  பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார்.   தெளிவத்தை என்ற ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் பெயருடன், தான் வாழ்ந்த ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டார்.
1960-களில் தமிழ் இலக்கியத் துறையில்  சிறுகதை ஆசிரியராக நுழைந்தார்.  பிறகு குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி நாடகம், திரைப்படக் கதை எனப் பல தளங்களில் தடம் பதித்தார்.
இலங்கை மலையக மக்களின் வாழ்க்கையை இவரது படைப்புகள் வெளிப்படுத்தின.
‘காலங்கள் சாவதில்லை’ என்பது இவரது முக்கியமான நாவல். அவரது ஆய்வு நூல்களான ‘20-ம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு’, ‘மலையக சிறுகதை வரலாறு’ ஆகியவை இவரைச் சிறந்த ஆய்வாளராக அடையாளம் காட்டின.
பல்வேறு நாடுகளில் பல விருதுகளைப் பெற்றவர் இவர்.
 
 
download
தாதாசாகெப் பால்கே  நினைவு நாள்(1944)
இந்திய திரைத்துறையின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாகெப் பால்கே   ஏப்ரல் 30, 1870 அன்று நாசிக்கில் பிறந்தார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.
கறுப்பு வெள்ளையில், ஒலி இல்லாமல் இவர் உருவாக்கிய திரைப்படங்கள்தான் இந்தியாவில் அறிமுகமான முதல் திரைப்படங்களாகும்.
பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு முழு நீள சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்தார்.
அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
 
dharmapuri-bus-fire
3 மாணவிகளை எரித்த அதிமுகவினருக்கு தண்டனை வழங்கப்பட்ட நாள் (2007)
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் (அப்போதும் முதல்வராக இருந்த) அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும்  அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். இந்த வழக்கை அதிமுக தரப்பு இழுத்தடித்தது. அதிமுக ஆட்சி இருந்தபோது வழக்கை நடத்த  காவல்துறை ஒத்துழைப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எல்லா  தடைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது.
28 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டு நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து 2007ம் ஆண்டு இதே நாள் சேலம் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. தண்டனையை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.