1

ஆங்கிலேயர் ஆட்சிக்கான விதை (1599)

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வித்திட்ட தினம் இன்று. இந்தியாவில், வர்த்தகம் மேற்கொள்ளும் தனி உரிமையை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத் வழங்கிய தினம். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது. பிறகு மெல்ல மெல்ல இந்தியாவை அடிமைப்படுத்தி ஆள ஆரம்பித்தது.

 

2

ஒளிவிளக்கு அறிமுகம் (1879)
அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கே வெளிச்சம் கொடுத்த நாள் இன்று. 1979ம் ஆண்டு இதே நாள்தான் ஒளிவிளக்கை உருவாக்கினார் எடிசன். மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிராப், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.18 ஆம் நூற்றாண்டில் வாயு விளக்குகளே பயன்பாட்டில் இருந்த காலத்தில், மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது பெரும் கனவாகவே இருந்தது. 1879ல் பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை உட்டன் என்பவருன் சேர்ந்து எடிசன் கண்டுபிடித்தார்.

 

index

தாவூத் இப்ராகிம் பிறந்தநாள் (1955)

இந்தியாவின் அவமானங்களில் ஒன்றான  கொடூர பயங்கராவாதியான தாவூத் இப்ராஹிம் பிறந்தநாள் இன்று. மும்பையை மையமாகக்கொண்டு தனக்கென நிழல் உலகை அமைத்துக்கொண்டவன். 1993 மும்பை குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நடத்தியவன். 2003இல் அமெரிக்க அரசு இவரை “உலகத் தீவிரவாதி” என்று குறித்து இவரின் பணம், சொத்துகளை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கு கோரிக்கை செய்துள்ளது.

இன்டர்போல் போலீஸ் இவனை தேடிவருகிறது. பாகிஸ்தானில் வசித்து வருகிறான். இவன் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தையும், பாகிஸ்தானில் இவன் இருப்பதற்கான ஆதங்களையும் இந்திய அரசு அளித்தும் தங்கள் நாட்டில் இவன் இல்லை என பாகிஸ்தான் சாதிக்கிறது.