வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி

வால்ட் டிஸ்னி பிறந்தநாள்
உலகப் புகழ் பெற்ற ஓவியரும் கார்ட்டூனிஸ்டுமான வால்ட் டிஸ்னி பிறந்தநாள் இனறு.  மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்ற  கற்பானை பாத்திரங்களை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த இவர்,  வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரானரும் ஆவார். டிஸ்னி என்ற உலக புகழ்பெற்ற கேளிக்கை பூங்காவை உருவாக்கியவர்.
(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
இருபத்தாறு ஆஸ்கார் விருதுகளை  வென்றவர். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை.  ஏழு எம்மி விருதுகளும் வென்றார்.
தயாநிதிமாறன் பிறந்தநாள
தயாநிதிமாறன் பிறந்தநாள

தயாநிதிமாறன் பிறந்தநாள
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. பிரமுகருமான தயாநிதி மாறன் 1966ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித்தார். 2009-2011 காலகட்டத்தில் இந்தியாவின் நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறைஅமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.
இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உறவினரும், முன்னாள் மத்திய அமைச்சரான முரசொலி மாறனின் மகனும் ஆவார். இவரின் மூத்த சகோதரரான கலாநிதி மாறன் சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்.  .
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில் இவருக்குத் தொடர்பிருப்பதாக நடுவண் புலனாய்வுச் செயலகம் குற்றம் சாட்டியதால், ஜூலை 7, 2011 அன்று இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார். தற்போது வழக்கை எதிர்கொண்டுள்ளார்.
 
கல்கி கிருஷ்ணமூர்த்தி
கல்கி கிருஷ்ணமூர்த்தி

கல்கி நினைவுநாள்
பிரபல எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் விளங்கிய கல்கி கல்கி அவர்கள் மறைந்த தினம் இன்று. இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். . இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது
ஸ்ரீ அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர்

அரவிந்தர் நினைவு நாள்
ஸ்ரீ அரவிந்தர்  1950ம் ஆண்டு இதே தினத்தில்தான் மறைந்தார். இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆன இவர்,  இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.
ஸ்ரீ அரவிந்தர் வட இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார். கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா என்போரின் மகன். ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார். 1879 இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராக விளங்கினார். தாமரையும் குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். பெப்ரவரி 1893 இல் இந்தியா திரும்பினார்.
வங்கப் பிரிவினை அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தது.  1907 இலும் 1908 இலும் இருமுறை  ஆங்கிலேயே  ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார்.
சிறை வாழ்க்கை யோக நெறியில் அதிகம் அக்கறை கொண்டார்.  ஸ்வராஜ் (விடுதலை) என்பதை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் உணர்ந்தார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்றார்.
1909இலே சிறையிலிருந்து விடுதலை பெற்றதை அடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தை செலுத்தினார். 1910இல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தார். ஆங்கிலேய அரசிற்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து யோகநெறியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.  பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் பெயரிலான ஆசிரம் உலகப்புகழ் பெற்றது.
நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா நினைவுநாள்
தென்னாப்பிரிக்க சுதந்திரத்துக்காக போராடியவரும், அந்நாடு சுதந்திரமடைந்தவுடன் முதல் அதிபராக விளங்கியவருமான நெல்சன் மண்டேலா 2013ம் ஆண்டு இதே நாள்தான் மறைந்தார்.  நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் முக்கியமானவர் இவர்.  நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தவர்.  பெரும்பாலான சிறைக்காலத்தை  ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தவர். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
சுல்பிகர் அலி பூட்டோ
சுல்பிகர் அலி பூட்டோ

சுல்பிகர் அலி பூட்டோ பிறந்தநாள்
இன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டொ 1928ம் ஆண்டு இதே நாள்தான் பிறந்தார்.  1971 முதல் 1973 வரை பாகிஸ்தானின் ஜனாதிபதியாகவும் 1973 முதல் 1977 வரை பிரதம மந்திரியாகவும் பதவி வகித்தார். 1977ல் ராணுவ தளபதி கர்னல்  ஜியாவுல் ஹக் ராணுவ புரட்சி மூலம் இவரிடமிருந்து பதவியை பறித்து ஆட்சியைக் கைப்பற்றினார்.  பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டார். சுல்பிகர் அலி பூட்டொவின் மகள் பேனசீர் பூட்டொவும் பின்னர் தீவிர அரசியலில் புகுந்து பாகிஸ்தான் பிரதமர் ஆனார்.
முதல் ஒருநாள் போட்டி
முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி
உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது  1971ம் ஆண்டு இதே நாளில்தான் ஆஸ்திரேலியாவில் நடந்தது.  ஐந்து நாள்  டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 1971-ல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் மைதானத்தில் டேஸ்ட் போட்டி விளையாடத்தான்  ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.  ஆனால் மழையால் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு போட்டி நடைபெற வில்லை. அதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றமடைந்தனர். நாலாவது நாள் மழை இல்லாததால், ஒரு நாள் போட்டி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு அணி யும் தலா 40 ஓவர்கள் பந்து வீசின. முதலில் பேட்டிங் செய்த இல்லிங்க்ஸ் வொர்த் தலைமையிலான இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த பில் லாரி தலைமயிலான ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 191 ரன்களெடுத்தது வென்றது. பார்வையாளர்களுக்கு இந்த ஒருநாள் போட்டி மிகவும் பிடித்துப்போனது. அதையடுத்து அனைத்து நாடுகளும் ஒருநாள் போட்டி விளையாடத்துவங்கின.