2
டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் 1884ம் ஆண்டு இதே தினத்தில்தான் பிறந்தார்.
புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தன் வேலையைத் துறந்து, சுதந்திர போராட்டத்தில் இணைந்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு காலம் சிறைப்பட்டார்.
1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.. . 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான்.
இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார்.
3
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துரடன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3ம் தேதி பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
index0
 
முதல் எலக்ட்ரானிக் வாட்ச்
1957ம் ஆண்டு இதே நாள்தான் அமெரிக்காவின் ஹமில்டன் நிறுவனம் மின்கலன் சக்தி ( எலக்ட்ரானிக்) மூலம் இயங்கும் உலகின் முதலாவது கடிகாரத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது. ஹமில்டன் 500 எனப் பெயரிடப்பட்ட – சாவி கொடுக்க தேவையில்லாத இக்கடிகாரம் ஆரம்பத்தில் விற்பனையில் சாதனை படைத்தது. ஆனால் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டன. ஹமில்டன் கம்பெனியே தனது தயாரிப்பில் தொடர்ச்சியாக பல முன்னேற்றங்களை செய்து பழுதாகாத கடிகாரங்களையும் பின்னர் வெளியிட்டது. 1969ம் ஆண்டு ஜப்பானின் சீகோ மின்னணு கடிகாரம் வரும் வரை ஹமில்டன் கடிகாரங்களே விற்பனையில் முதல் இடத்தில் இருந்தது.
index
வீரபாண்டிய கட்டபொம்மன்  பிறந்தநாள்
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து தீரத்துடன் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். இவர் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். இந்த பொம்மு மரபில் வந்த திக்விஜய கட்டபொம்மன் எனப்படும் ஜெகவீர கட்டபொம்மன் – ஆறுமுகத்தம்மாள் (தமிழ்ப் பெண்மணி) தம்பதியரின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
ஆங்கிலேயர் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனால் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 – 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார்.
அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தார்.
செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது.
அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
a
சாவித்திரிபாய் புலே பிறந்த தினம்

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று. மகாராஷ்ட்ராவில் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் . ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர்  ஜோதிபாய் புலேவை திருமணம் செய்துகொண்டார். ஜோதிபாய் புலே,  இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் . இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக  ஆனார்.
அதுமட்டுமல்ல.. தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் என சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர் இத் தம்பதியினர். பால்ய வயதிலேயே விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அப்போது  இருந்தது.  அந்த மழிக்கும் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை தாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் .
விதவை  மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார் சாவித்ரிபாய் புலே.  இவர் சிறந்த கவிஞரும் ஆவார்.  மராத்தியத்தின் நவீன கவிதை காலம், இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவர் கவிதைகள் எழுதினார்.
1852ல் இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு பாடுபட்டது.  மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய். தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து தனது அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார்.