1
 
இந்திய குடியரசு தினம்
இந்திய நாட்டுக்கு ஜனவரி 26, மிக முக்கியமான நாள். இங்கிலாந்து நாட்டின் ஆளுகையில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும், இந்தியக் குடியரசின் சட்டங்கள் ஆங்கிலேயர்கள் அமைத்து வைத்ததாகவே இருந்தது அதனை சுதந்திர இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்திடும் நோக்குடன் இந்திய விடுதலைக்குப் பிறகு, பாபு ராஜேந்திரப் பிரசாத் அவர்களின் தலைமையில் புதிய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபையால், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழு அமைக்கப்பட்டு, புதிய சிறப்பு மிக்க இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது.
முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்திய பாராளு மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அது 1950ம் வருடம் ஜனவரி 26ம் நாள் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
2
 
ஆஸ்திரேலியா நாள்
என்பது ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளன்று ஆஸ்திரேலியாமுழுவதும்   கொண்டாடப்படுகிறது.  இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாகபிரித்தானியக் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூர்வதாகும். ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும்.
1788 இல் இந்நாளில் நியூ சவுத் வேல்ஸ், ஜாக்சன் துறையில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால்  ஆஸ்திரேலியாவில் முதலாவது குடியேற்ற பகுதி அமைக்கப்பட்டது. முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்தலக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.