இன்று: செப்டம்பர் 5: கவிஞர் மு.மேத்தாவின் பிறந்தநாள்

Must read

kavignar

 இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாள் என்பதும் பலரும் அறிந்ததே.

இன்று ஒரு கவிஞரின் பிறந்தநாளும்கூட!

சரித்திரம் படைப்பேன் என்பதாக பலரும் பேசக் கேட்கிறோம். ஏன்.. நம் எல்லோருக்கும்கூட… நம் காலத்துக்குப் பிறகும் நமது பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்கிற ஆசை ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது.

“வரலாறு”  என்பது குறித்த மு.மேத்தாவின் கவிதையிலிருந்து சில வரிகள்..

“ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் – பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!|

எப்டிப்பட்ட சிந்தனை!

இப்படி எண்ணற்ற கவிதைகளை தமிழுக்குத் தந்த கவிஞர் மு.மேத்தா இன்று எழுபத்தியோராம் வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை  வாழ்த்துவோம்!

More articles

1 COMMENT

Latest article