இந்திய நடிகர் சங்கம்: ரஜினிக்கு “பஞ்ச்” கொடுத்த கமல்!

Must read

Rajinikanth-Kamal-Haasan-240913

இந்திய நடிகர் சங்கம்:  ரஜினிக்கு “பஞ்ச்” கொடுத்த கமல்!

சென்னை:

தென்னிந்திய நடிக்ர் சங்க தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், உடனடியாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்ற வேண்டும் என்று இன்று காலையில் ரஜினி தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “ தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும்”என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்து உள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய நடிகர் கமலஹாசன் நடிகை கெளதமியுடன் இன்று காலை 11 மணிக்கு வந்தார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்தவர், செய்தியாளர்களிடம், ”தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். பல பெரியவர்கள் விரும்பி கட்டியது இந்த தென்னிந்திய சங்கம் தென்னிந்தைய நடிகர் சங்கம் ஆகும்” என்றார்.

முன்னதாக இன்று காலை வாக்களிக்க வந்த ரஜினிகாந்த், “நடிகர் சங்க பெயரை, தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும்” என்றார். இதே கருத்தை ஏற்கெனவே நடிகர் சீமான் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரும் கூறியிருந்தனர்.

ரஜினி வாக்களித்து சென்றபிறகு, பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்த சரத்குமார், “தமிழ் தமிழ் என்று நாங்கள்தான் கூறுகிறோம். ரஜினியும் அதையே சொல்வதன் மூலம் எங்களையே ஆதரிக்கிறார் என்பது தெளிவாகிறது” என்றார்.

ஆனால், “தன்மீது கன்னடர் என்று முத்திரை குத்தப்படுவதைத் தவிரக்க ரஜினி அப்படி சொல்லியிருக்கலாம். மற்றபடி சரத்குமார ஆதரிப்பதாக அவர் சொல்லவே இல்லை” என்று விஷால் அணியினர் பதறினார்கள்.

“இந்த நிலையில், “தமிழ்” பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி, “ இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும்” என கமல் கூறி ரஜினிக்கு பன்ச் கொடுத்திருக்கிறார்” என்று நடிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More articles

Latest article