இதயமா…..மூளையா..?

Must read

heartvsbrain

வாழ்க்கை பயணம்
இனிதாய் அமைய…
நம் இதயம் சொல்வதை
கேட்க வேண்டுமா..?
மூளை சொல்வதை கேட்க வேண்டுமா.?
எது சரி..?!

இதயத்தின் தேர்வு…
ஆசை மற்றும் உணர்ச்சிகள் சார்ந்தது…
காலம் மாற…அதுவும் மாறும்…!!
பல காதல்கள் தோற்பதும்…இதயம் நொறுங்குவதும் இதனால்தான்…!!
வெளித்தோற்றம் கண்டு ஏமாறுவதும்….
ஆசை வார்த்தை கேட்டு வாழ்க்கை
தொலைப்பதும் இதனால்தான்…!!

மூளையின் தேர்வு…
நல்லது எது…கெட்டது எது
என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கும்..!!
மூளை சொல்வதை கேளுங்கள்…
வாழ்க்கை இனிமையாகும்…!!

– முத்துக்குமார்

More articles

Latest article