காங்கிரசாரின் முந்தைய போராட்டம்
காங்கிரசாரின் முந்தைய போராட்டம்

வேலூர்:
ம்பூரில் உள்ள காங்கிரஸ் பவன் கட்டிடம் யாருக்கு சொந்தமானது என்பதில் ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. தமாகா தொண்டர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால்  ஆம்பூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் நேதாஜி சாலையில் காங்கிரஸ் பவன் கட்டிடம் உள்ளது. காங்கிரஸ் தியாகியான  இளையெருமாள் செட்டியார் என்பவர் தனக்கு சொந்தமான இந்த கட்டிடத்தை, 1958ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு அளித்தார். இதற்கான விழா அப்போதைய முதல்வர் காமராஜர் முன் நடந்தது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் பிரிந்து தமாகாவை துவக்கிய பிறகு,  இந்த கட்டிடம் குறித்து பிரச்சினை வெடித்தது.   இந்தக் கட்டிடத்துக்கு தமாகாவினர் உரிமை கொண்டாடினர். கட்டிடத்தை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர்.
இதை எதிர்த்து ஏற்கெனவே காங்கிரஸார் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், அந்தக் கட்டிடத்தில்  இன்று நுழைந்த காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்களை வெளியேற்ற தமாகா தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.  அப்போது திடீரென இருதரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். நாற்காலி மற்றும் தடிகளால் தாக்கிக்கொண்டனர். . இதில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல்  தடுக்க பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.