ஆபாச பேச்சு: நடிகர் ராதாரவி மீது காவல் ஆணையரிடம் புகார்!

Must read

rada
சென்னை:

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேட்டியளித்ததாக நடிகர் ராதாரவி மீது  சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலருமான ராதாரவி, சில நாட்களுக்கு முன், இணையதள   தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ஒரு கேள்விக்கு, “நெருக்கத்துக்கு பெண்களைத்தானே அழைக்க முடியும்..? ஆண்களையா அழைக்க முடியும்?’ என்று, பதில் அளித்திருந்தார்.  இந்த பேட்டி,  இணையம் மற்றும் ‘வாட்ஸ் ஆப்’பில் அதிவேகமாக பரவியது.

இந்த பேட்டியை பார்த்தவர்கள் பலரும், ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தனர்.   மனித உரிமைகள் கழகம் என்ற அரசியல் கட்சியினர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று  ராதாரவி மீது புகார்  கொடுத்தனர்.

அதில், “பெண் இனத்தையே இழிவுபடுத்திய, நடிகர் ராதாரவி மீது, பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.  சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய, ‘சிடி’யையும் ஆதாரமாக கொடுத்தனர்.

இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றார்கள்.

More articles

29 COMMENTS

Comments are closed.

Latest article