visaranai1
கதையாசிரியர் ஆட்டோ சந்திரனின் இயற்பெயர் எம். சந்திரகுமார். இவர் எழுதிய லாக்அப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் விசாரணை. ம்.
“ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம். செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டேன். குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி இரண்டு வாரம் காவல்துறையினர் கடுமையாக தாக்கினார்கள். தாங்க முடியாத டார்ச்சர். எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தைத்தான் 2006-ம் ஆண்டு நாவலாகவெளியிட்டேன்.
எனது நாவல் வெளியாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவாக எடுக்கப்படும் என்று நான்நினைததுக்கூட பார்க்கவில்லை” என்கிறார் சந்திரன்.
படம் வெளியான பிறகு இவருக்கு ஏக மவுசு. படம் பார்க்க கோவையில் திரையரங்குக்கு சென்ற இவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், சந்திரனுக்கு உற்சாக வரவேற்புஅளித்தனர். பலர் அவரைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் நின்றுசெல்பியும் எடுத்துக் கொண்டனர்.
அது மட்டுமல்ல… “வேறு கதை இருக்கிறதா..” என்று இவரை இப்போது பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அணுகி வருகிறார்கள். அது மட்டுமல்ல.. பிரபல ஹீரோ ஒருவர் தனது மேனேஜர் மூலம் இவரைத் தொடர்புகொண்டு, தனக்கேற்ற கதை இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்.
எப்படியோ.. நல்ல படைப்பாளிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான்!