திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அ.தி.மு.க.விர் அமைத்துள்ள “செட்டிங்” மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று
அக் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல நாட்கள் முன்பாகவே, தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைகளில் அனுமதி இன்றி பேனர்கள் வைக்கப்பட்டன. நடைபாதைகளை மறி்த்தும், சாலை சந்திப்புகளிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் போக்குவரத்து பாதிக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. கோவை பகுதியில் அ.தி.மு.கவினர் வைத்த பேனர்களால் சமீபத்தில் விபத்தும் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள், அ.தி.மு.க.வினர் மீது அதிருப்தியில் இருக்கிரார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த பேனர் கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாளுக்காக அவரை வாழ்த்தி நடு ரோட்டில் செட்டிங்கே போட்டிருக்கின்றனர் அ.தி.மு.கவினர்.

திருப்பூரில் – அவிநாசி மெயின் ரோட்டில், வேலம்பாளையம் சாலை பிரியும் சந்திப்பில் இந்த செட்டிங் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது திருப்பூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.