அறிவிருக்கா.. : குட்டிக்கதை BY ராமண்ணா

Must read

மூகவலைதளங்களில் ஆளாளுக்கு “அறிவிருக்கா..”  என்று எழுதி வருவதைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த குட்டிக்கதை இது. பெரியார் சொன்னதாக நினைவு. படித்துப்பாருங்கள்.

a

தங்களது கழுதையை விற்க சந்தைக்கு கிளம்பினார்கள், தாத்தாவும் பேரனும். வழியில் ஒருவர், “அறிவிருக்கா.. வீணா குதிரையை இழுத்துகிட்டு போறதுக்கு.. ஒருத்தர் உட்கார்ந்து போகலாமே” என்றார்.

சரிதான் என்று தாத்தா, குதிரையில் உட்கார பேரன் நடந்தான். வழியில் வந்த இன்னொருவர், “உங்களுக்கு அறிவிருக்கா.. சின்னப்பையனை நடக்கவைக்கிறியே.. பாவமில்லையா..” எனறார்.

சரிதான் என்று பேரன், குதிரையில் உட்கார்ந்துவர, தாத்தா நடக்கலானார். எதிரே வந்த ஒருத்தர், “அறிவிருக்கா… வயசானவரை நடக்க வைக்கிறியே.. பாவமில்லையா..” என்றார்.

ராமண்ணா
ராமண்ணா

குழம்பிப்போன தாத்தாவும், பேரனும் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

இருவரும் சேர்ந்து குதிரையைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்!”

கதை ஓவர்.

இந்தக் கதையை இளையராஜாவுக்கு ஆதரவாகவோ, அந்த நிருபருக்கு ஆதரவாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.  அப்பாடா…  என்னை இரு தரப்பாரிடமிருந்தும் தப்பிவிட்டேன்.

More articles

Latest article