அரசு விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Must read

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் ஆதிதிராவிட கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள், பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகின்றனர்.
kadalur-student strike
விடுதியில் சுத்தமான தண்ணீர் இல்லை, மின்சாரம் அடிக்கடி தடை படுவதால் படிக்க முடிவதில்லை, கழிப்பறையை சுத்தம் செய்வதில்லை போன்றவற்றை சீர்செய்து தர வலியுறுத்தி விடுதி மாணவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
தகவல் அறிந்ததும் தேவானம்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

More articles

Latest article