அமைந்தகரை, சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் பொதுமக்களின் வசதிக்காக  சிறப்பு பாஸ்போர்ட் முகாம் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.
passport+office+kerala
வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து அவர்களுக்கான பாஸ்போர்ட் தேவையும் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்காக  சிறப்பு பாஸ்போர்ட் மேளாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு பாஸ்போர்ட் முகாம்ல் சுமார் 400 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் (Online) மூலம் நேர்காணலுக்கான நேரத்தை பதிவு செய்து பங்கேற்கலாம். இதில்  தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த முகாம் மூலம் சுமார் ஆயிரத்து 500 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.