அமெரிக்காவின் தொழில் நிறுவனங்களை வாங்கும் சீனா
வாஷிங்டன்:
அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை சீனா அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறது.
அமெரிக்கா உளிட்ட உலக நாடுகள் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இந்த வாய்பபை பயன்படுத்தி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகளை வாங்குவது, சில நிறுவனங்களை இணைப்பது, கையகப்படுத்துவது போன்ற செயல்களில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதிக விலை கொடுத்து நிறுவனங்களை கையகப்படுத்தும் சீனாவின் இந்த நிலையை கண்டு பல நாடுகள் அச்சமடைந்துள்ளன.
இந்த ஆண்டு மட்டும் 81.6 பில்லியன் டாலர் மதிப்புகள்ள 102 ஒப்பந்தங்களை சீனா மேற்கொண்டுள்ளது. இதேகாலக் கட்டத்தில் கடந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் மதிப்பிலான 72 ஒப்பந்தங்களை சீனா மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரம் கீழ் நோக்கி செல்லும் இந்த சமயத்தில் சீனாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் கூட ஜென்ரல் எலக்ட்ரிக் நிறுவனம், தனது வீட்டு உபயோகப் பிரிவு தொழிலை சீனாவின் குயிங்டோவை மையமாக கொண்டு செயல்படும் ஹையர் நிறுவனத்திடம் விற்பனை செயதுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கிரேன் உள்ளிட்ட சுமை தூக்கும் கருவிகளை தயாரிக்கும் டெரக்ஸ் கார்ப்பரேஷனை சீனாவில் ஜூம்லையன் நிறுவனம் வாங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் விதை மற்றும் பூச்சி கொல்லி குழுமமான சைன்ஜென்தாவை கெம்சீனா நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஹெச்என்ஏ குழுமம் தொழில்நுட்ப விநியோகஸ்தரான இன்கிராம் மைக்ரோவை 6 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
அமெரிக்காவின் முதலீடு இலக்கு தான் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஆதாரமாக உள்ளது என்பதை சீன தொழில் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளது.
முதலீடுக்கு அமெரிக்க சந்தைதான் கவர்ச்சிகரமானது என்பதை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அங்குள்ள சட்ட திட்டங்கள் பெரிய இடையூறாக இருப்பதாகவும் கருத்து எழுந்துள்ளது.