அமெரிக்கவில் பலியான ஆறு இந்தியர்கள்! உடல்கள் வந்து சேருமா என உறவினர் கவலை! !

Must read

accident
ஒக்லஹாமா:
அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேர் உட்பட ஆறு இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஜா (32) என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள சிடிஎஸ் நிறுவனத்தில் பணிபுந்து வந்தார். அவருக்கு அன்னு ஜா(31) என்ற மனைவியும் மூன்று மற்றும் ஒரு வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த எட்டாம் தேதி அவர் தனது குடும்பத்தார் மற்றும் இரு நண்பர்களுடன் மினிவேனில் சென்றுள்ளார்.
வேனை பாஸ்கர் ஓட்டியுள்ளார். மழை பெய்து கொண்டிருந்தபோது பாஸ்கர் வேனை வேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார்.
வேன்,  சௌடோ அருகே உள்ள மேயஸ் கவுன்ட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செல்கையில் கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினிவேனில் இருந்த 6 பேரும் பலியானார்கள்.
அவர்களில் பாஸ்கரின் நண்பர்களில் ஒருவரான பெண்ணை மட்டும் யார் என அடையாளம் காண முடியவில்லை.
விபத்து மற்றும் மரண செய்தியை  சிடிஎஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள  பாஸ்கரின்  உறவினர்களிடம் தெரிவித்துள்ளது.  ஆனாலும்  பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் உடல்கள் இன்னும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. பாஸ்கரின் சகோதரர்  சகோதரர் பிரேம் ஷங்கர் ஜா குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகியுள்ளதாக கூறினார்.

More articles

Latest article