படம்: மாடல்
படம்: மாடல்

பெண்களின் “கற்பு” கன்னித்திரை கிழியாமல் இருப்பதில் இருக்கிறது என்ற நம்பிக்கை வெகுகாலமாக இருந்தது.  முதலிரவு அன்று இதற்காக பலவிதமான சோதனைகள் இருந்தன.
ஆனால் நாகரீகம் வளர வளர, இதுபோன்ற பிற்போக்குத்தனங்கள் ஒழிந்தன. தவிர, “சைக்கிள் ஓட்டுவது, ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வது போன்றவற்றால்கூட கன்னித்திரை கிழியும் வாய்ப்பு உண்டு” என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
ஆனால், இந்த நவீன யுகத்திலும் முதலிரவு அன்று மணப்பெண்ணுக்கு கன்னித்திரை சோதனை நடந்தது என்று தனது முகநூல் பகத்தில் எழுதி வருத்தப்பட்டிருக்கிறார் விக்ராந்த்.
அவரது பதிவு:
“என்னோட தோழியோட தோழிக்கு சமீபத்துல கல்யாணம் ஆகியிருக்கு…
முதலிரவுல வெள்ளை நிற படுக்கை விரிப்பு போட்டு அந்த பொண்ணுக்கு Virginity Test பண்ணியிருக்குதுங்க பெருசுங்க… அனால் காலைல படுக்கை விரிப்புல ரத்த கசிவு இல்லாததனால.. அந்த பொண்ணு பயந்து போய் தன்னோட உடலை கீறி ரத்த கசிவை படுக்கை விரிப்புல ஏற்படுத்தி தன்னோட பத்தினி தன்மையை காப்பாத்தியிருக்கு…
இது எவ்ளோ பெரிய கொடுமை… உறவுக்கு பின் எல்லா பெண்களுக்கும் ரத்தம் வந்தே ஆகனும்ன்னு நினைக்கிறது கிட்டதட்ட ஒரு சைக்கோத்தனம்..
Hymen என்ன ஹீமேனா அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்குறதுக்கு… அது கிழிய cycling, gymnasium, masturbation ன்னு எவ்ளோ காரணமிருக்கும்…ஏன் பிறப்பிலிருந்தே கன்னித்திரை இல்லாம கூட பெண்கள் இருக்காங்க…
இன்னொரு சம்பவத்துல … முதலிரவு முடிஞ்ச கையோட பெட்ஷீட்டை அலசி ஆராய்ந்து ரத்தம் இல்லாததனால பொண்ணு வீட்டுக்கு போன் போட்ட மாமியாரு ‘ என்ன பொண்ண பெத்து வெச்சிருக்கீங்க நேத்து எதுவும் வரல…இன்னைக்கும் எதுவும் வரலனா , உங்க பொண்ண வந்து கூட்டிட்டு போயிடுங்கன்னு Flipkart வாங்குன பொருள ரிட்டர்ன் பண்ற அளவுக்கு ஈசியா பேசியிருக்காங்க…
அதுசரி…பெண்களுக்கு மட்டுமே இந்த பத்தினி டெஸ்ட் நடக்குதே.. ஆம்பளைக்கு எதை வெச்சு சுலபமா கண்டுபிடிப்பீங்கன்னு கேட்டா கலாச்சார காவலர்களிடம் ஒரு பதிலும் இல்ல…ஏன்னா சுன்னத் பண்ணிட்டா முன்தோல் வெச்சிலாம் கண்டுபிடிக்கமுடியாது…
பொண்ணோட விருப்பமில்லாமல் இதுப்போல நடத்தப்படும் பத்தினி டெஸ்ட்ட பத்தி கொஞ்சம் ஆழ்ந்து யோசிச்சா… Universal declaration of Human rights ஆர்ட்டிக்கல் 5 படி இது மனித உரிமைக்கு எதிரானதுன்னு கூட சொல்லலாம்…
அதெல்லாம் தெரியாது… பர்ஸ்ட் நைட் முடிஞ்சா பெட்ல ரத்தம் இருக்கனும் அப்போதான் என் பொண்டாட்டி பத்தினின்னு அடம்பிடிப்பவர்கள் கவனுத்துக்கு எனக்கு தெரிஞ்சு கொடுக்குற சில பாயிண்ட்கள்…
‪#‎Hymen விரியும் நெகிழும் தன்மை கொண்ட Mucous tissue ன்றதால உங்க பெர்பாமன்ஸ்ல அது கிழியாம இருக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு…
‪#‎Chinese போன் மாதிரி Chinese hymen மார்க்கெட்ல ஈசியா கிடைக்குது..அதனால சம்மவம் நடக்க ஆரம்பிச்சதும் அது செயற்கையா ரத்தம் மாதிரி ஒரு லிக்குவிட வெளியே கசிய விடும்…. அந்த நேரத்துல ஹை டெசிபல்ல ‘என் பொண்டாட்டி பத்தினிடான்னு கத்தி சந்தோஷபட்டுக்குலாம்…
‪#‎hymenoplasty ன்னு ..கிழிந்த கன்னித்திரைய பேக் டு பார்ம் கொண்டு வர ஒரு Reconstruction surgery கூட இப்ப பண்ணலாம்..அதனால இன்னொரு டாக்டர் கூட இதை கண்டுபிடிக்கமுடியாது… நீங்க மறுபடியும் வெற்றி புன்னகைய சம்பவத்துக்கு பிறகு முகத்துல வெச்சிக்கிலாம்.. (டெக்னாலஜி வாழ்க)
ரைட்டு…அப்போ நாங்க எப்படிதான் கண்டுபிடிக்குறதுன்னு இன்னமும் முக்கின்னு கேக்குறவங்க ராமன் மாதிரி உங்களுக்கு எதுனா முஸ்லி பவர் கிடைச்சா பொண்ட்டிய நெருப்புல நடக்கவுட்டு பத்தினி டெஸ்ட் பண்ணலாம்… (போலிஸ் புடிச்சா நிர்வாகம் பொறுப்பல்ல)” – இவ்வாறு தனது பதிவில் எழுதியிருக்கிறார் விக்ராந்த்.
என்னதான் நாகரீகம் வளர்ந்ததாக நாம் நினைத்தாலும் இன்னும் கற்கால மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கிறது.