O-Panneerselvam
நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்ட 13 அமைச்சர்களுக்கு, அதிமுக சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அதில்,அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூர் தொகுதியிலும், நிதித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஆயிரம்விளக்குத் தொகுதியில் சமூக நலம், சத்துணவுத் திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். பா. வளர்மதி போட்டியிடுகிறார்.
ஒரத்தநாடு தொகுதியில் ஆர் வைத்திலிங்கமும், விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரும் போட்டியிடுகிறார்கள்.
ஆத்தூர் தொகுதியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் போட்டியிடுகிறார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி. தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பொள்ளாச்சியில் ஜெயராமன், நன்னிலம் தொகுதியில் ஆர். காமராஜ் போட்டியிடுகின்றனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.
கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.
தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துரை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.